வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். 
தற்போதைய செய்திகள்

வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்னா

பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்னா

DIN

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பிர்காவில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பிர்காவில் கடந்த 2024 ஆம் ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைநிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை காட்டுத்தோட்டத்தில் அமைந்துள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடனடியாக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகள்! கடைசியாக தெரிய வந்த உண்மை!!

பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?

SCROLL FOR NEXT