கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நபர்!

உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதைப் பற்றி...

DIN

உத்தரப் பிரதேசத்தில் யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நபர் தற்போது தனது வீட்டில் குணமாகி வருகின்றார்.

மதுரா மாவட்டத்தின் சுன்கார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா பாபு (வயது 32), இவர் கடந்த சில காலமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், தனது வயிற்று வலிக்கு தீர்வு காண விரும்பிய அவர் அது குறித்து இணையதளத்தில் ஆராய்ந்துள்ளார்.

இந்நிலையில், யூடியூபில் அறுவைச் சிகிச்சை செய்யும் விடியோக்களை பார்த்த அவர் அதற்கு தேவையான கத்தி, ஊசிகள் போன்ற மருத்துவ உபகரணங்களை வாங்கியதுடன் கடந்த மார்ச் 18 அன்று தனது வீட்டில் தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்ய முயன்று தனது வயிற்றை தானே கிழித்து பின்னர் தைத்துள்ளார்.

இதையும் படிக்க: தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! காட்டிக்கொடுத்த தீ விபத்து!!

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச்.19 அன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. உடனடியாக அவரது உறவினரான ராஹுல் என்பவர் ராஜா பாபுவை மீட்டு பிருந்தாவனம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து ஆக்ராவிலுள்ள எஸ்.என். மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், அவர் ஆக்ரா மருத்துவமனைக்கு செல்லாமல் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவரது உறவினரான ராஹுல் கூறியதாவது, அவரது வீட்டில் ஓய்வு பெற்று வரும் ராஜா பாபுவின் காயங்கள் தற்போது குணமாகி அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், அவர் தனது வயிற்றின் மேல் பகுதியை மட்டுமே கத்தியால் கிழித்துள்ளதாகவும், அதனால் உள்ளுறுப்புகள் எதற்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT