முகப்பு
தற்போதைய செய்திகள்

களைகட்டும் ஐபிஎல்: ஜடேஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய தோனி!

எம். எஸ். தோனி ஜடேஜாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

Updated On : 22 மார்ச், 2025 at 3:29 PM
பகிர்:

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அந்த அணியின் மூத்த வீரரான எம். எஸ். தோனி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்த புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் தமது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-ஆவது சீசன், ஐபிஎல் 2025, இன்று(மார்ச் 22) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்று வருகிறது.

அதனைத்தொடர்ந்து இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் நாளை(மார்ச் 23) இரவு சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →