தற்போதைய செய்திகள்

நியாயமான மறுசீரமைப்பு: ஹைதராபாத்தில் அடுத்த கூட்டம்!

நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

DIN

நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

நியாயமான மறுசீரமைப்பு கோரி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,

"இது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம். மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை. கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இணைந்து இதை எதிர்த்துப் போராடுவோம்.

தில்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள். எனவே மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்.

நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும்" என்று பேசினார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விருப்பம் தெரிவித்ததன்பேரில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT