தற்போதைய செய்திகள்

சூடான் ராணுவத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி?

சூடான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

சூடான் நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

வடக்கு டர்ஃபூர் மாநிலத்தின் தோரா சந்தையில் சூடான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (ஆர்.எஸ்.எஃப்.) குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சூடான் ராணுவம் தற்போது வரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற வான்வழித் தாக்குதல் மற்றும் கார்டூமிலுள்ள மசூதியில் துணை ராணுவம் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “மக்களின் மீதான தாக்குதல்களினால் கடுமையாக பீதியடைந்துள்ளதாகத்” தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இருதரப்புக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வரும் சூழலில் சூடான் ராணுவம் நேற்று (மார்ச் 25) அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை பச்சை நிறத்திலும், துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை சிவப்பு நிறத்திலும் குறிப்பிட்டு முதல்முறையாக வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அவர்களது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளதாவது, சூடான் ராணுவப் படைகள் மற்றும் அந்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற படைகள் கிளர்ச்சியை முடிவுக்கொண்டு வந்து பாதுகாப்பை நிலைப்படுத்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சூடானின் ராணுவப் படைக்கும் ஆர்.எஸ்.எஃப். துணை ராணுவப் படைக்கும் இடையிலான மோதலில் 30,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் சுமார் 1.5 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெரு நாட்டில் 2026-ல் பொதுத் தேர்தல்! அதிபர் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT