தற்போதைய செய்திகள்

விடுபட்டோருக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

DIN

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, அல்லாளபேரி ஆகிய பகுதியில் ரூ. 9.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடைகளை மக்களின் பயன்பாட்டிற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று திறந்துவைத்தார்.

அதேபோல எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ.13.16 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையையும் திறந்துவைத்தார்.

இதன்பின்னர் நிகழ்வில் பேசிய அமைச்சர்,

"மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பெண்கள் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் விடுபட்ட மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்னும் 3 மாதங்களில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை கிடைக்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT