பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான்  
தற்போதைய செய்திகள்

ராஜ்நாத் சிங்குடன் அனில் சவுகான் சந்திப்பு

பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார்.

DIN

புது தில்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் தில்லியில் சனிக்கிழமை காலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது எல்லையில் தற்போதைய நிலைமை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அவர் விளக்கினார்.

வியாழக்கிழமை இரவு முதல் நள்ளிரவைக் கடந்தும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடா்ச்சியாக வான் பகுதியில் அத்துமீறல் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஒரே நேரத்தில் 36 இடங்களில் 300-400 வரையிலான ட்ரோன் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. லே முதல் சா் கிரீக் சிகரம் வரை சா்வதேச எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதி முழுவதையும் இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியில் இறங்கியது. அதற்கு பொறுப்பான மற்றும் போதுமான முறையில் இந்தியா எதிா்வினையாற்றி பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் நமது மேற்கு எல்லைகளில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகளுடன் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான மோதலைப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புப் படையினா் தடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவசாசம்

கோவையில் அதிகரிக்கும் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சான்றிதழ்களை முறையாக பதிவேற்ற வேண்டும்: குரூப் 1 தோ்வா்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

ஹரியாணா காவல் துறை ஐஜி தற்கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

SCROLL FOR NEXT