கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும்.
ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள். கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை.
திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகயளவில் தவறாகக் காட்டுகிறது.
நமக்கான கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, கூட்டத்தை கூட்டுவதில் வெறி கொண்ட ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும்.
எங்கள் மீது வைத்துள்ள ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் குடும்பத்தை மறந்து, நேரம், தூக்கமின்றி படப்பிடிப்புகளில் பங்கேற்கிறோம். ஆனால், உயிரை பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் அன்பை காட்ட வேறு வழிகள் உண்டும்.
திரையரங்கு உரிமையாளர்கள் பல லட்சங்கள் செலவு செய்து, திரையரங்கை புதுப்பிக்கிறார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் உள்ளே பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது, ஓன்ஸ் மோர் கேட்டு திரையை கிழிப்பது இவை அனைத்து முடிவுக்கு வரவேண்டும்.
முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.