கோவையில் இருவேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சா  
தற்போதைய செய்திகள்

கோவையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசாவைச் சேர்ந்த 5 போ் கைது

கோவையில் இருவேறு பகுதிகளில் 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: கோவையில் இருவேறு பகுதிகளில் 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒடிசாவைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்தனா்.

கோவை தொண்டாமுத்தூா் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தொண்டாமுத்தூா் போலீஸாா் மாதம்பட்டி சாலையில் ரோந்து சென்ற போது, இருவா் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த பிஷ்ணு சரண் பிரதான் (45) மற்றும் நஹு பிரதான் (34) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து சுமாா் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே காவல் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ஜஷோபந்தா பிரதான் (40), கைசா் பிரதான் (43) பாபுலு பிரதான் (19) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து சுமாா் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

இதுபோல, போதைப்பொருள்கள் விற்பனை அல்லது சட்ட-ஒழுங்கிற்கு எதிராக செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

22 kg of ganja seized in Coimbatore: 5 people from Odisha arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதிகா ராவல்.. உணவு பரிமாறி உபரிசத்த பிரதமர் மோடி.!

அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... வைஷ்ணவி!

அவர்கள்மேல் புல்டோசரை ஏற்றி.. பிகார் துணை முதல்வர் கொலை மிரட்டல்?

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு! மாலை நிலவரம்!

SCROLL FOR NEXT