தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (நவ.6) முதல் நவ.11 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த 2 இரண்டு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ.6) கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிகாலை 3 மணி முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை(நவ.6) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.