ஏற்காடு கொண்டை ஊசி வளைவு அருகே 25 பள்ளத்தில் கவிழ்ந்த கார். 
தற்போதைய செய்திகள்

ஏற்காடு அருகே 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 2 பேர் காயம்

ஏற்காடு கொண்டை ஊசி வளைவு அருகே 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார், 2 பேர் காயமடைந்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

சேலம்: ஏற்காடு கொண்டை ஊசி வளைவு அருகே 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார், 2 பேர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீரைக்காடு பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுனத்தில் தங்கி பணிபுரியும் சென்னையை சேர்ந்த நவீன் (32), கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஈஸ்வர் (23) மற்றும் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (32) ஆகிய மூன்று வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு இரவு சுமார் 12 மணியளவில் அலுவலக பயண காரில் காக்கம்பாடி பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

கார் விபத்துக்குள்ளானதும் காரிலிருந்து வெளியே வர முடியாமல் காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து அருகில் இருந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது கார் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர்கள் ஏற்காடு காவல்துறையினருக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்துவிட்டு காரில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பகுதியிலிருந்த பொது மக்கள் உதவியுடன் மீட்டகப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸில் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான பிரசாந்த் உடல் உடல்கூறாய்வுக்காக ஏற்காடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

One killed, 2 injured as car falls into 25-foot gorge near Yercaud

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT