தில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் "சக்ச்சைக்குரிய" பதிவுகள் வெளியிட்டதற்காக மாநிலம் முழுவதும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா சர்மா வியாழக்கிழமை தெரிவித்தார்.
நவம்பா் 10 ஆம் தேதி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே 12 போ் கொல்லப்பட்டு 27 போ் காயமடைந்த சக்திவாய்ந்த வெடிப்பைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இது பயங்கரவாதச் செயல் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சரவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
செங்கோட்டை அருகே சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த விசாரணை அமைப்புகள், வெடித்த ’ஹூண்டாய் ஐ20’ காரை ஓட்டியவர் ஃபரிதாபாத்தில் மருத்துவராகப் பணிபுரியும் உமர் உன் நபி என்பதை கண்டுபிடித்தனர்.
அவர், ’ஹூண்டாய் ஐ20’ காரில் வெடிகுண்டை பொருத்தி தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டது. தொடர்ந்து, வெடித்த காரில் இருந்த உடல் பகுதிகளைக் கைப்பற்றி, உமரின் தயாரின் மாதிரியுடன் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே, தில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் "சக்ச்சைக்குரிய" பதிவுகள் வெளியிட்டதற்காக மாநிலம் முழுவதும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தில்லி கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் "சக்ச்சைக்குரிய" பதிவுகள் வெளியிட்டதற்காக மாநிலம் முழுவதும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 6 பேரைத் தவிர, ரபிஜுல் அலி (போங்கைகான்), போரிட் உதின் லஸ்கர் (ஹைலகண்டி), இனாமுல் இஸ்லாம், பபோன் (லக்கிம்பூர்), இல் ஃபிரூஜ் அகமது, ஷாஹில் இஸ்லாம், ஷோமன் சிக்தர், ரகிபுல் சுல்தான் (பார்பேட்டா), நாசிம் அக்ரம் (ஹோஜாய்), தஸ்லிம் அகமது (கம்ரூப்), பாப்பி ஹுசைன், அப்துர் ரோஹிம் (தெற்கு சல்மாரா) உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சர்மா கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை பிடித்து தண்டிப்பதே மாநில அரசின் நோக்கம் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.