புது தில்லி: நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள்(மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
தில்லி சாந்தி வனத்திலுள்ள நேரு சமாதிக்கு இன்று காலை சென்றடைந்த சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,
முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதாக கூறியுள்ளார்.
நேரு 1889 ஆம் ஆண்டு இதே நாளில் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில்(பிரயாக்ராஜ்) மோதிலால் நேரு-ஸ்வரூப் ராணி இணையருக்கு மகனாக பிறந்தார்.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி முகங்களில் ஒருவராக இருந்தவர்.
நாட்டின் விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல போரட்டங்களில் பங்கேற்று சுமார் 8 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
வாழ்நாள் முழுவதும் பழமைவாத சித்தாந்தங்களில் இருந்து விலகியே இருந்தவர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947 இல் பொறுப்பேற்ற நேரு, தனது பதவிக் காலத்திலேயே, 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.