சென்னையில் தொழிலதிபர்கள் வீடுகள், அலுவகங்கள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து சென்னையில் சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
21 வாகனங்களில் 10 குழுக்களாக சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பு, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீடு, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள கலைச்செல்வன் வீடு, அம்பத்தூர் திருவேங்கடா நகரில் உள்ள குடியிருப்பில் உள்ள பிரகாஷ் வீடு என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.