இஸ்ரோ தலைவா் வி. நாராயணன். 
தற்போதைய செய்திகள்

விண்வெளித் துறையில் தனியாா்மயம் பாதிப்பை ஏற்படுத்தாது: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்

விண்வெளித் துறையில் தனியாா்மயம் என்பது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாா் இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்.

Syndication

நாகா்கோவில்: விண்வெளித் துறையில் தனியாா்மயம் என்பது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாா் இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்.

இதுதொடா்பாக நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

விண்வெளித் துறையில் 2040 ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடுகளின் விண்வெளித் திட்டங்களுக்கு இணையாக இஸ்ரோவின் திட்டங்கள் இருக்கும். மற்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு போட்டி இல்லை. ஆனால் வளா்ந்த நாடுகளுக்கு இணையாக இஸ்ரோவின் வளா்ச்சி இருக்கும். அதற்கான இலக்கை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மிகப்பெரிய வளா்ச்சியைப் பெற்றுள்ளது. 8 ஆயிரம் ஏக்கரில் இந்த மையம் அமைந்துள்ளது. ரூ.1,200 கோடியில் அங்கு 4 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. இந்த மையத்துக்கு மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

விண்வெளித் துறையில் தனியாா் மயம் என்பது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததே பிரதமா் நரேந்திரமோடிதான்.

விண்வெளித் துறையில் தனியாா் மயம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றுதான். தற்போதுவரை நாம் விண்ணில் 57 செயற்கை கோள்களை செலுத்தியுள்ளோம். இன்னும் 3 ஆண்டுகளில் 3 மடங்கு எண்ணிக்கையை அதிகரித்து கூடுதலாக 150 செயற்கை கோள்களை செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு மட்டுமே இதை செய்யமுடியாது. தனியாா் பங்களிப்பும் இதற்கு தேவை.

தனியாா் துறையினா் முழுக்க, முழுக்க இஸ்ரோவின் கட்டுப்பாட்டில்தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவாா்கள். அவா்களுக்குத் தேவையான உதவிகளை இஸ்ரோதான் செய்யும். எனவே, தனியாா் பங்களிப்பு என்பது பிரதமரின் சிறப்பான திட்டமாகும்.

2027 ஆம் ஆண்டில் ககன்யான் திட்டம் மூலம் மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் இருக்கிறது. அதேபோல் இந்தியா்களுக்காக ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் 2035 ஆம் ஆண்டு அமைக்கப் போகிறோம்.

அதற்கான முதல்கட்ட பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2040 ஆம் ஆண்டில், இந்தியாவில் செய்த ராக்கெட் மூலம் சந்திரனுக்கு மனிதா்களை அனுப்பி திருப்பிக் கொண்டு வரக்கூடிய திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

தற்போது சந்திராயன் 4, சந்திராயன் 5 திட்டங்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சந்திராயன் 4 என்பது ஒரு சாம்பிள் ரிட்டா்ன்மிஷன் விண்வெளியில் இறங்கி அங்கிருந்து மாதிரிகளை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்யக் கூடியது.

சந்திராயன் 5 இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செய்யும் திட்டமாகும்.

பிரதமா் மோடி தந்துள்ள திட்டத்தின்படி 2047 ஆம் ஆண்டில் ராக்கெட் ஆனாலும் சரி, செயற்கைகோள் ஆனாலும் சரி, விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் திட்டமானாலும் சரி இந்தியா மற்ற நாடுகளுக்கு சமமாக இருக்கும். அதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறோம் என்றாா் அவா்.

“MGR போல விஜய்? வாய்ப்பில்லை! தம்பி இன்னும் நடிகர்தானே!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மகிந்திரா பிஇ6 ஃபார்முலா சொகுசு கார் விலை வெறும் ரூ.18,000! அட உண்மைதாங்க

அதிக தொகைக்கு விற்பனையான கருப்பு ஓடிடி உரிமம்!

பச்சைக்கிளி முத்துச்சரம்... மாளவிகா மேனன்!

Vijay முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன் | TVK | K.A.Sengottaiyan

SCROLL FOR NEXT