ஆரஞ்சு எச்சரிக்கை 
தற்போதைய செய்திகள்

திருச்சிக்கு ஆரஞ்சு அலா்ட்: தயாா்நிலையில் 154 பாதுகாப்பு மையங்கள் தயாா்நிலை

டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி: டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களுக்கு உதவிட 154 பாதுகாப்பு மையங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது:

டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலொ்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

புயல், மழை காலங்களின்போது பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 154 பாதுகாப்பான மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்கலாம்

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 0431-2418995 என்ற எண்ணிற்கோ புயல், மழை, வெள்ளம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும், வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளுக்கோ அல்லது வட்டாட்சியா்களின் அலைபேசி எண்ணிற்கோ பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்கலாம்.

திருச்சி கிழக்கு 0431-2711602, 94454-61808, திருச்சி மேற்கு 0431-2410410, 94450-00602, திருவெறும்பூா் 0431-2555542, 7825-873784, ஸ்ரீரங்கம் 0431- 2230871, 94450-00603, மணப்பாறை 04332 -260576, 94450-00604, மருங்காபுரி 04332-299381, 94454-61805, லால்குடி 0431-2541233, 94450-00605, மண்ணச்சநல்லூா் 0431-2561791, 94450-00606, முசிறி 04326-260226, 94450-00607, துறையூா் 04327- 222393, 94450-00609, தொட்டியம் 04326-254409, 94450-00608 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

Orange alert for Trichy, 154 security centers on alert

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் கூட்டணியா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

SCROLL FOR NEXT