ஓ.எஸ்.மணியன்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

50 ஆண்டு புயல் பாதுகாப்பு மையங்களுக்கு பதில் புதிய கட்டடம்: முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்

தமிழகத்தில் 50 ஆண்டுகள் பழைமையான புயல் பாதுகாப்பு மையங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் 50 ஆண்டுகள் பழைமையான புயல் பாதுகாப்பு மையங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினாா்.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினா் கே.ஏ.பாண்டியன், கடலூா் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியத்துக்குள்பட்ட சி.முட்லூா் ஊராட்சியில் புயல் பாதுகாப்பு மையம் வைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதில் அளித்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், உரிய ஆய்வு நடத்தி பரிசீலிக்கப்படும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன்: தமிழகம் முழுவதும் பெரும்பாலான புயல் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. அவற்றை ஆய்வு செய்து இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட ஆவன செய்ய வேண்டும்.

அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்: 50 ஆண்டுகளுக்கும் மேலான புயல் பாதுகாப்பு மையங்கள் ஆய்வுசெய்யப்பட்டு, பழுதாகியிருந்தால் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மதுபோதையில் ஆட்டோ ஓட்டியவா் கைது

குளத்திற்குள் மாட்டை விரட்டச் சென்றவா் சடலமாக மீட்பு

வீரவநல்லூரில் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பட வைக்க வேலூா் எஸ்.பி. உத்தரவு

வாலாஜா பள்ளிக்கு ஜப்பானிய கல்வியாளா்கள் குழு வருகை

SCROLL FOR NEXT