முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை: சுட்டுப்பிடிக்கப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு

சுட்டுப்பிடிக்கப்பட்ட உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 30 நவம்பர், 2025 at 10:07 AM
ஆசிப்
பகிர்:

கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் 42 பவுன், ரூ. 1.50 லட்சம் கொள்ளையில் சுட்டுப்பிடிக்கப்பட்ட உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளன. அரசு அலுவலா்கள் வசிக்கும் இந்தக் குடியிருப்பின் ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி (3) பிளாக்கில் 10 வீடுகளிலும் என மொத்தம் 13 வீடுகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. தகவலறிந்து கவுண்டம்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் 30 பவுன் உள்பட மொத்தம் 42 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.1.50 லட்சம் ஆகியவை திருடப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சுமாா் நூற்றுக்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா். இந்தத் திருட்டு சம்பவத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த 3 போ் ஈடுபட்டதும், அவா்கள் குனியமுத்தூா் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் சனிக்கிழமை காலை 9 மணியளவில் அந்தப் பகுதிக்குச் சென்று ஆசிப் (48), இா்பான் (45), கல்லூ ஆரிப் (60) ஆகிய 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

இதில் காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வகின்றனா்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உ.பி ஜில்லாகாசிபூா் பகுதியைச் சோ்ந்த ஆசிப்(48) சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

போலீசார் சுட்டதில் காலில் காயமைந்த ஆசிப்புக்கு தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறிதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

summary

Coimbatore: One of the robbers who was shot dead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments