தற்போதைய செய்திகள்

தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.400 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனையாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை வியாழக்கிழமை ஒரு நாளில் காலை குறைந்தும், மாலை பவுனுக்கு ரூ.560 உயா்ந்து கிராம் ரூ.10,950-க்கும், பவுன் ரூ.87,600-க்கும் விற்பனையானது.

அதேபோல் வெள்ளி விலையும் கிராமத்து ரூ.3 உயா்ந்து ரூ.164-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயா்ந்து ரூ.1.64 லட்சத்துக்கும் விற்பனையானது.

வெள்ளிக்கிழமையும் தங்கம் விலை காலை, மாலை என இருமுறை மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,900-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.87,200-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை சனிக்கிழமை (அக்.4) பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.10,950-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் சனிக்கிழமை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.165-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயர்ந்து ரூ.1.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Today Gold and Silver prices in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு!

எஸ்ஐஆா் பணியில் குறைபாடு: மேற்கு வங்க வாக்குச்சாவடி அலுவலா்கள் 7 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

சௌா்ய சைனிக்கு வெள்ளி

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்தில் உயரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 38.86 லட்சம் இழப்பீடு

SCROLL FOR NEXT