அஹில்யாநகா்: நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயிகள் சுதேசி (பூர்வீக) பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
மகாராஷ்டிரம் மாநிலம் அஹில்யாநகர் மாவட்டத்தில் பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் மற்றும் பத்ம பூஷன் டாக்டர் பாலாசாகேப் விக்கே பாட்டீல் ஆகியோரின் சிலைகளை ஞாயிற்றுக்கிழமை அமித் ஷா திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
உலகில் உள்ள அனைவரும் தங்கள் பொருள்களைத் தயாரிக்க இந்தியா வந்தாக வேண்டும். ஏனெனில் 140 கோடி நுகா்வோரை கொண்ட சந்தையாக இந்தியா உள்ளது. எனவே, நாட்டு மக்கள் அனைவரும் எந்தவொரு வெளிநாட்டுப் பொருளும் நமது வீடுகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கமால் இந்தியப் பொருள்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணிசமாக உயர்த்தும். ஏற்கனவே உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலைக்கு நாடு முன்னேறி வருவதாகவும், உலகளவில் முதன்மையான இடத்தை அடைவதற்கு சுதேசி பொருள்களைப் பயன்படுத்துவதற்கு உறுதியான அர்ப்பணிப்பு தேவை என்றார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
மகாராஷ்டிராவில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் உதவி வழங்கும் என்றும் உறுதியளித்த அமித் ஷா, மாநிலத்தின் மழை பாதிப்பு குறித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் தன்னை சந்தித்து விளக்கியதாகவும், சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்லதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார், அமைச்சர்கள் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல், அமைச்சர்கள் சந்திரசேகர் பவான்குலே, பங்கஜா முண்டே மற்றும் பிற பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.