முகப்பு
தற்போதைய செய்திகள்

நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கும்: பிரதமா் மோடி

கனமழை மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது

Updated On : 5 அக்டோபர், 2025 at 10:35 PM
பிரதமர் நரேந்தி மோடி
பகிர்:

கனமழை மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும் நேபாள அரசு மற்றும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

நேபாளத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் வேதனையளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் நேபாள அரசு மற்றும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், நட்பு நாடான நேபாளத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Prime Minister Narendra Modi has said that the loss of lives and damage caused by heavy rains in Nepal is distressing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.