தீபாவளி விடுமுறை 
தற்போதைய செய்திகள்

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது கலிபோர்னியா!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நியூயார்க்: இந்திய புலம்பெயர்ந்தோருக்கான வரலாற்று முன்னேற்றமாக, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது, இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.

கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசம் செவ்வாய்க்கிழமை தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டதாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஷ் கல்ராவின் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் 'ஏபி 268' என்ற மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் கவின் நியூசம் அக். 12 ஆம் தேதிக்கு முன்னர் மசோதாவில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கும் '‘ஏபி 268' என்ற மசோதாவுக்கு ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

இதையடுத்து இந்திய அமெரிக்கர்களின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்துள்ளது, இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.

புதிய மசோதாவின்படி தீபாவளியன்று கலிபோர்னியா மாகாணத்தில் அரசு வேலைக்குச் செல்வோர், சமூகக் கல்லூரிகள், பொதுப் பள்ளிகள் முதலியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

தீபாவளி அரசு விடுமுறையை அடுத்து கலிபோர்னியாவில் அரசு விடுமுறை நாள்கள் 11 ஆக உயர்ந்துள்ளது.

கலிபோர்னியாவை தாயகமாகக் கொண்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய அமெரிக்கர்களுக்கு, இது மிகுந்த பெருமை மற்றும் மகிழ்ச்சிக்கான தருணம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு கலிபோர்னியாவின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு பங்களித்த இந்திய அமெரிக்கர்களின் தலைமுறைகளை கௌரவிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

"தீபாவளி சமூகங்களை நல்லெண்ணம், அமைதி மற்றும் பகிரப்பட்ட புதுப்பித்தல் உணர்வு ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கிறது."

ஏற்கெனவே, 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த நிலையில், தற்போது கலிபோர்னியா மாகாணமும் அந்த பட்டியலில் மூன்றாவதாக இடம் பிடித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

In a historic development for the Indian diaspora, California has designated Diwali as an official state holiday, becoming the third state in the US to officially recognise the Indian festival of lights as a holiday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் Stalin பேச்சு

பிக் பாஸ் வீட்டுக்கு சீல்! போட்டியாளர்கள் வெளியேற்றம்! ஏன்?

சிறையில் இஸ்ரேல் ராணுவத்தினர் துன்புறுத்தினர்: கிரெட்டா தன்பெர்க்

மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சௌமன் சென் பதவியேற்பு!

ஸுபீன் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! உறவினரான போலீஸ் டிஎஸ்பி கைது!

SCROLL FOR NEXT