மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை 112.27 அடியாக குறைந்தது .
மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை 112.27 அடியாக குறைந்தது .
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,266 கன அடியிலிருந்து 6,867 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 13,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மடங்குகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக புதன்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.27 அடியாக குறைந்தது.
அணையின் நீர் இருப்பு 81.67 டிஎம்சியாக உள்ளது.
summary