பொன்னை அணைக்கட்டு ஆற்றில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள வெள்ள நீர் 
தற்போதைய செய்திகள்

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆந்திரம் மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆந்திரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கலவகுண்டா அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து உள்ள நிலையில், ஆந்திரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கலவகுண்டா அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதேபோன்று பொன்னை அணைக்கட்டு ஆற்றில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 4 மணியளவில் வினாடிக்கு 6,500 கனஅடி நீரானது திறக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொன்ணை ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ செல்ல வேண்டாம் எனவும் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மார்த்தாண்ட குப்பம், கீரைசாத்து, வெப்பாலை, குகையநல்லூர், திருவலம், வசூர் கொண்டாக்குப்பம், ஏகம்பரநல்லூர், நெல்லிக்குப்பம் மோட்டூர், இலாலாப்பேட்டை, முகுந்தராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றினை கடக்கவோ வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றிற்கு செல்லாமல் பாதுகாத்துக்கொள்ளவும்.

மேலும், வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளையும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இரண்டு மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Flooding in the Ponnai River Flood warning issued for people living along the banks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேரே இஷ்க் மெய்ன் படத்தால் பாதிப்புக்கு ஆளானேன்: க்ரித்தி சனோன்

அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டு: பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதல்வர் உத்தரவு

நெஞ்சம் மறப்பதில்லை... ஸ்ரீதேவி அசோக்!

மாயமென்ன.. மேகா சுக்லா

இதமான காற்று... அன்கிதா மல்லிக்

SCROLL FOR NEXT