மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது தொடர்பாக...
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,540 கனஅடியாக அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,033 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 29,540 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டது.
வெள்ளிக்கிழமை 111.48 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 112.48 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 81.98 டிஎம்சியாகவும் உள்ளது.