மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 117.73 அடியிலிருந்து 117.98 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,683 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 117.73 அடியிலிருந்து 117.98 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,584 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,683 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 7,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 90.28 டிஎம்சியாக உள்ளது.
summary
today Mettur Dam situation