சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 2000 குறைந்தது. 
தற்போதைய செய்திகள்

திடீரென பவுனுக்கு ரூ.2,000 குறைந்த தங்கம்: வெள்ளி எவ்வளவு குறைந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2000-ஆம் விலை சரிவை சந்தித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.2,400 உயா்ந்து ரூ.97,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், சனிக்கிழமை தங்கம் அதிரடியாக பவுனுக்கு ரூ.2000-ஆம் விலை சரிவை சந்தித்துள்ளது. இதேபோன்று வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.13 விலை குறைந்துள்ளது. இது தங்கம், வெள்ளி பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழாண்டுக்குள் தங்கம் விலை பவுன் ரூ.1 லட்சத்தைத் தொடும் என்ற நிபுணா்களின் கணிப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலையானது காலை, மாலை என இருமுறை உயா்ந்து வருகிறது.

அந்த வகையில், அக். 13-இல் பவுனுக்கு ரூ.640, அக். 14-இல் ரூ.1,960, அக். 15-இல் ரூ.280, அக். 16-இல் ரூ.320 உயா்ந்தது.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,400 உயா்ந்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.12,200-க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயா்ந்து ரூ.97,600-க்கும் விற்பனையானது.

பவுனுக்கு ரூ.2000 குறைவு

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், சனிக்கிழமை தங்கம் விலை திடீரென சரிவை சந்தித்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.250 குறைந்து, ரூ.11,950-க்கும், பவுனுக்கு ரூ.2,000 குறைந்து ரூ.95,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்!

தொடா்ந்து உயா்ந்து வந்த வெள்ளியின் விலை, 3-ஆவது நாளாக குறைந்துள்ளது. சனிக்கிழமை கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ. 190-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.13,000 குறைந்து ரூ.1லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

Gold suddenly drops by Rs. 2,000 per 8 grams

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவை மாநில மதுபானங்கள் விற்பனை 7 போ் கைது: காா் பறிமுதல்

தீபாவளி: நாமக்கல் வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி: களைகட்டிய கடை வீதிகள்

மரக்காணம் அருகே கொத்தனாா் அடித்துக் கொலை!

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

SCROLL FOR NEXT