செங்கல்பட்டு: திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிவிட்டால் விமரிசனத்தை நிறுத்தி விடுவார்கள் என்றும், விசிக அதிமுக பக்கம் போகவில்லை என்பதுதான் விமரிசனங்களுக்கு காரணம் என்று திருமாவளவன் தெரிவித்தார.
செங்கல்பட்டில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிவிட்டால், அதன் பிறகு யாரும் நம்மைப் பற்றி விமரிசனம் செய்து பேச மாட்டார்கள். நாம் அவர்களுக்கு ஒரு இலக்காகவே இருக்கமாட்டோம். அவர்களது வேலையும் முடிந்துவிடும், செயல்திட்டம் நிறைவேறிவிடும்.
நம் மீது இத்தனை விமரிசனங்கள் வருவதற்கு காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக பக்கம் போகவில்லையே, பாஜகவோடு உறவாடவில்லையே, பாஜகவையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் திரும்பத் திரும்ப விமரிசனம் செய்யக்கூடியவராக ஒறுவராக திருமாவளவன் இருக்கிறாரே, சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறாரே, திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இவர் உறுதுணையாக இருக்கிறாரே என்பதுதான். இதுதான் அவர்களின் பிரச்னை என்று திருமாவளவன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.