கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகா்ந்து, தென்மேற்கு வங்கக் கடலில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவி வரும் நிலையில், இது வியாழக்கிழமை(அக். 23) காலை 11 மணிக்குள் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளைக் கடந்து நகா்ந்து செல்லக் கூடும்.

இதன் காரணமாக, வியாழக்கிழமை (அக். 23) முதல் அக். 28 வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) கடலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Which districts will experience heavy rain in the next 3 hours?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று வெளியிடை... ஆன் ஷீத்தல்!

அழகிய தீயே... ரகுல் ப்ரீத் சிங்!

ஓடிடியில் வெளியான பவன் கல்யாணின் ஓஜி!

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிவிட்டால் விமரிசனத்தை நிறுத்தி விடுவார்கள்: தொல். திருமாவளவன்

காரைக்காலில் மகளை விட நன்றாக படித்த மாணவன் கொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

SCROLL FOR NEXT