திருவாலங்காடு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்
திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவையை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்: திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவையை சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 2025-26 ஆண்டு பருவ கரும்பு அரைவையினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை(அக்.12) நடைபெற்றது.
இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்து கரும்பு அரைவை இயந்திரத்திற்குள் கரும்பு கட்டுகளை வைத்து தொடங்கி வைத்தார்.
Advertisement
Advertisement
அப்போது ஆட்சியர் மு.பிரதாப், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் ச.சந்திரன், கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் அ.மீனா அருள், கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
Sugarcane grinding begins at Thiruvalankadu Sugar Mill
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.