புது தில்லி: மேற்கு தில்லியின் நங்லோய் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையின் போது மூன்று பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் தில்லியின் ரோஹிணியில் தில்லி காவல்துறை மற்றும் பிகாா் காவல்துறையின் கூட்டுக் குழுவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது நான்கு தேடப்படும் 4 குண்டா்கள் கொல்லப்பட்டனர், மூன்று பேர் தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில், தப்பிச் சென்றவர்கள் மேற்கு தில்லியின் நங்லோய் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீஸ் குழு, அவர்களை சரணடையுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதனால் போலீஸ் குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் மூன்று பேரும் காயமடைந்ததாகவும், பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினார்.
அவர்கள் சிக்மா கும்பலைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்ற நிலையில் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக குற்றச் செயல்களைச் செய்யத் திட்டமிட்டு, கடந்த பல நாள்களாக தில்லியில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவா்களைக் கண்டுபிடிக்க கூட்டுக் குழு ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து போலீஸ் குழுவின் என்கவுன்டா் நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.