சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.  PTI
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு 800 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000-க்கு விற்பனை தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை அக்.22-இல் பவுன் ரூ.3,680 குறைந்து ரூ.92,320-க்கும், அக்.23-இல் பவுன் ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.800 குறைந்து கிராம் ரூ.11,400-க்கும், பவுன் ரூ.91,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கும், பவுன் ரூ.800 உயர்ந்து ரூ.92,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.70  லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

The price of gold in Chennai today is 11,500 per gram for 22 karat gold and Rs.92,000 for 8 grm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயாஜாலம்... துஷாரா விஜயன்!

வடகிழக்கு பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

சேலையிலொரு சோலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

யாதவ சமூக தலைவர்களுக்கு சீட் ஒதுக்காமல் ‘கை’விட்ட தே.ஜ. கூட்டணி! பிகார் தேர்தலில் பின்னடைவாகுமா?!

SCROLL FOR NEXT