பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை, நடிகர் விஜய்சேதுபதி வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் வீடு இம்முறை சூப்பர் டீலக்ஸ் வீடு, பிக் பாஸ் வீடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் வீடு சொகுசு வசதிகளுடனும், பிக் பாஸ் வீடு அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருவருக்கு நாமினேஷன் ஃபிரி பாஸ் வழங்கப்படும். மற்றவர்கள் வெளியேறத் தேர்வு செய்யப்பட்ட (நாமினேஷன்) நபர்களின் பட்டியலில் இணைவார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்ஷா, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன், கலையரசன் ஆகிய 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தனர்.
ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் வெளியேற்ற நினைக்கும் இரு நபர்களின் பெயர்களை போட்டியாளர்கள் பரிந்துரை செய்து, அதில் வாக்குகளின் அடிப்படையில் நாமினேஷன் செய்யப்பட்டவராக பிக் பாஸ் அறிவிப்பார்.
அந்தவகையில் இந்த வாரம் அரோரா, துஷார், ஆதிரை, கானா வினோத், ரம்யா ஜோ, கலையரசன், பிரவீன், சுபிக்ஷா, வியனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
இந்த வாரம் இவர்களுக்கு மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்று நடிகை ஆதிரை வெளியேறியுள்ளார்.
எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்று இரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வரும்.
கடந்த வாரங்களில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் நடிகை ஆதிரை வெளியேறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர்.
விரைவில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் நுழையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிளாக்மெயில் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.