2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் வரும் காலங்களில் ஒரு பெண் அதிபராக வருவதற்கான சாத்துயக்கூறுகள் இருப்பதாக முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சூசமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஹாரிஸ் அளித்த பேட்டியில், "நான் இன்னும் அரசியலில் இருந்து விலகவில்லை," என்றும், தனது வாழ்வின் பெரும்பகுதியை மக்களுக்கான சேவையிலே கழித்துள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்குத் தயாராகி வருகிறேன்.
2028 அதிபர் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், வரும் ஆண்டுகளில் ஒரு பெண் அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார்.
மேலும், "நான் கருத்துக்கணிப்புகளை கருத்தில் கொள்வதில்லை. அப்படி எடுத்திருந்தால், அதிபர் பதவிக்கோ அல்லது துணை அதிபர் பதவிக்கோ போட்டியிட்டிருக்க மாட்டேன் - நிச்சயமாக இங்கே அமர்ந்து பேசியிருக்கவே மாட்டேன்." என்று கூறினார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் செயல்பாடுகள் கூறித்து பேசுகையில், "அதிகாரத்திற்காக அவர் எவ்வாறு எல்லாம் செயல்பட்டார் என்பதை அனைவரும் அறிந்தது தான். தன் மீதான அரசியல் நையாண்டி விமரிசனங்களைக் கூட அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் இந்த செயல்பாட்டால் ஒரு செய்தி நிறுவனத்தையே மூட முயன்றார்."
மேலும், அவர் அதிகாரத்திற்கு வந்த முதல் நாளிலிருந்தே சரணடைந்த பலர் ஒரு கொடுங்கோலரின் காலடியில் மண்டியிட்டு கிடப்பதாகவே தான் நம்புவதாகவும், அவர்கள் பல காரணங்களுக்காக, அடுத்த நிலை அதிகாரத்திற்காக அல்லது விசாரணையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக கூட இருக்கலாம் என்று ஹாரிஸ் கூறினார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பைடன் பாதியில் விலகியதை அடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.