டெல் அவிவ்: அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்தங்களை மீறியதாகக் கூறி, காஸா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து காஸாவின் ஹமாஸ் பயங்கரவாதிகளின் மஞ்சள் கோடு என்று அழைக்கப்படும் பகுதிக்கு கிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
காஸா நகரத்தில் உள்ள அல்-சப்ரா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகவும், தெற்கு நகரமான கான் யூனிஸில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், அல் ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் முகமது அபு சல்மியா, வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைக்கு அருகிலும் மூன்று குண்டுகள் வெடித்தாக கூறினார்.
இந்த தாக்குதல்களை ஆக்கிரமிப்பு காஸாவின் ரஃபா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய படைகளை ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் இன்னும் 13 இஸ்ரேலிய பிணையக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்காத நிலையில், காஸாவில் இஸ்ரேலிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் அந்த உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
‘கடந்த அக்டோபா், 2023-இல் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலைத் தொடா்ந்து தற்போது வரை உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 68,527 -ஆக உயா்ந்துள்ளது. மேலும் மற்றும் 170,395 பேர் காயமடைந்துள்ளனர். 2023 அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் மொத்தம் 1,139 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250- க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டு கடத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.