மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தியது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அவரது உருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கடந்த 28-ஆம் தேதி ஓதுவாா்களின் மங்கல இசை, கணபதி ஹோமம், சிவாசாரியா்களின் வேத மந்திரங்கள் முழங்க, லட்சாா்ச்சனை பெருவிழாவுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து புதன், வியாழக்கிழமைகளில் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை இரவு மதுரைக்கு வருகை தந்தார்.

இதையடுத்து, வியாழக்கிழமை நடைபெற்ற தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிலைக்கு முன் வைக் கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டி யர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முதல்வரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கு சாலை வழியாக புறப்பட்டுச் சென்றார்.

தமிழக முதல்வா் வருகையையொட்டி, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Chief Minister Stalin pays tribute to Pasumpon Muthuramalinga Thevar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT