பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் மரியாதை!
நாடாளுமன்ற வளாகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது தொடர்பாக...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தேவரின் நினைவிடத்தில் மலர் தூவியும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
இந்நிகழ்வின் போது, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற அலுவலகச் செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட தில்லி வாழ் தமிழ் மக்கள் பலரும் உடன் கலந்து கொண்டனர்.
Union Minister L. Murugan pays tribute to Pasumpon Muthuramalinga Thevar...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.