தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 31) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை (அக். 31) முதல் நவ. 5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய மத்திய கிழக்கு அரபிக் கடலில் சனிக்கிழமை(நவ.1) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் அடுத்த 2 நாள்களில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.