நிலநடுக்கம் 
தற்போதைய செய்திகள்

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவு

சீனாவின் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

திபெத்: சீனாவின் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் திபெத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருள்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியிலுள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது.

An earthquake of magnitude 3.8 struck Tibet in the early hours of Friday, as reported by the National Centre for Seismology.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஞ்சுக் கைவண்ணம்

ஆட்டுக் குட்டி

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழி காட்டுங்கள்!

SCROLL FOR NEXT