ஆல்யா மானசாவின் பதிவிலிருந்து... படம் - இன்ஸ்டாகிராம்
தற்போதைய செய்திகள்

என்னை நம்பியவர் - ஆல்யா மானசா பகிர்ந்த படம்!

புதிய தொடரில் தன்னை நம்பியதற்காக அத்தொடரின் தயாரிப்பாளருக்கு நடிகை ஆல்யா மானசா நன்றி தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

புதிய தொடரில் தன்னை நம்பியதற்காக அத்தொடரின் தயாரிப்பாளருக்கு நடிகை ஆல்யா மானசா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுவரை வேறு எந்தவொரு தயாரிப்பாளர்களுடனும் சமீபத்தில் புகைப்படங்களை பதிவேற்றாத நிலையில், புதிதாக நடிக்கவுள்ள பாரிஜாதம் தொடரின் தயாரிப்பாளருடன் இருக்கும் படத்தை ஆல்யா பகிர்ந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடர்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி வரும் நிலையில், ஆல்யா மானசாவின் புதிய தொடர் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது. பாரிஜாதம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் நாயகியாக நடிகை ஆல்யா மானசா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் ரக்‌ஷித் நடிக்கிறார். இவர்களுடன், லதா ராவ், ஸ்வாதி, ராஜ்காந்த் உள்ளிட்டோர் துணைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

காது கேளாத மாற்றுத் திறனாளியாக இதில் ஆல்யா மானசா நடிக்கிறார். இசை மீது பெரிதும் ஆர்வம் கொண்ட மேடைப் பாடகராக நாயகன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இதன் அடிப்படையில் பாரிஜாதம் தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாரிஜாதம் தொடரின் தயாரிப்பாளர் நாராயணன் உடன் ஆல்யா மானசா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அதனை சமுக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.

நன்றி தெரிவித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, ''என்றுமே என் வாழ்வில் நான் பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய புகைப்படம். நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள பாத்திரத்துக்கு என்னைத் தேர்வு செய்த தயாரிப்பாளர் நாராயணன். இந்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பாரிஜாதம் தொடர் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

Parijatham serial actress Alya manasa viral photos with producer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

வாட்ஸ்ஆப் வெப் பயனர்கள் சந்திக்கும் ஸ்க்ராலிங் பிரச்னை

இளையராஜாவுக்கு செப்.13ல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மாநிலங்களவை துணைத்தலைவர் வாக்களித்தார்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா வாக்களித்தனர்

SCROLL FOR NEXT