அகமதாபாத்: இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும், இந்தியர்கள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து அவற்றை "அழியாத" மொழியாக மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
இந்தி நாளாயொட்டி, குஜராத் மாநிலம், காந்திநகரில் 5-ஆவது அகில பாரத அலுவல்பூா்வ மொழி மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து, அவா் பேசியதாவது:
இந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே "எந்த மோதலும் இல்லை." நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மை அதன் பலம், பிரிக்கும் காரணி அல்ல. கலாசார ரீதியாக ஒன்றுபட்ட மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க இந்தியர்கள் தங்கள் தாய்மொழிகளுடன் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இந்தி அதன் தற்போதைய பயன்பாட்டிற்கு அப்பால் வளர வேண்டும் என்று வலியுறுத்திய அமித் ஷா, இந்தி வெறும் பேச்சு மொழி அல்லது நிர்வாக மொழியாக மட்டுமன்றி, அறிவியல், தொழில்நுட்பம், நீதி மற்றும் காவல் துறையின் பயன்பாட்டு மொழியாக மாற வேண்டும். இந்திய மொழிகளில் நிர்வாகம் மற்றும் பொது சேவைகள் செயல்படும்போது மட்டுமே மக்களுடன் உண்மையான தொடர்பு இருக்கும். இந்தியர்கள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து அவற்றை "அழியாத" மொழியாக மாற்ற வேண்டும் என்று ஷா வலியுறுத்தினார்.
பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் உள்ளூா் மொழிகளை வலுப்படுத்த செயலாற்றி வருவதற்காக பிரதமா் மோடிக்கு பாராட்டு நன்றி தெரிவித்த ஷா,
குழந்தைகளின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு, அவா்களிடம் பெற்றோா் தாய்மொழியில் பேச வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் இந்தி மற்றும் பிற மொழிகளை ஊக்குவிக்க உள்துறை அமைச்சகத்தில் பாரதிய பாஷா அனுபாக் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.