மும்பை: மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் நான்கு வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில், பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை குழந்தையின் பாட்டி அவளை பள்ளியில் விட்டுச் சென்ற பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதாக கோரேகான் காவல் நிலைய அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
குழந்தை பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், தனக்கு சோர்வாக இருப்பதாகவும் உடல் முழுவதும் வலிப்பதாகவும் பொற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.
இதையடுத்து குழந்தையின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து, போலீசில் புகார் அளித்தனர்.
குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாக கோரேகான் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.