நாமக்கலில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் கண்டனம்!
நாமக்கல் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம்.
நாமக்கல் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு, திமுக அரசின் மீது அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளதாக, உலக மகளிர் நாள்- ஆன இன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது.
Advertisement
Advertisement
ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை.
இப்படி ஒரு ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா?
குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் , ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
AIADMK General Secretary EPS has condemned the DMK government for the sexual assault of a Namakkal girl.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.