சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20ஆண்டு சிறை
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அனந்தன் நகா் பகுதியை சோ்ந்த மைதீன்கான் மகன் ஜெய்னூலாவுதீன் (74). கடந்த 2020 ஆம் ஆண்டு, 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தின்கீழ் இவரை, நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றஞ்சாட்டப்பட்ட ஜெய்னூலாவுதீனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்குரைஞா், நீதிமன்ற காவலா் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை கண்காணித்த நாகா்கோவில் துணை காவல் கண்காணிப்பாளா் ராஜா, நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வின்சென்ட் அன்பரசி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.