விஜய் | எடப்பாடி பழனிசாமி 
தற்போதைய செய்திகள்

விஜய் பேச்சுக்கு தமிழக மக்கள்தான் பதிலளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

விஜய் பேசி வருவது குறித்த கேள்விக்கு தமிழக மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சேலம்: விஜய் பேசி வருவது குறித்த கேள்விக்கு தமிழக மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கு திரண்டிருந்த அதிமுக நிா்வாகிகளுடன் கட்சியின் வளா்ச்சி குறித்தும், வரும் சட்டப்பேரவை தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஆலோசனைகளை மேற்கொண்டாா்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளா்கள் பாஜக மாநில தலைவா் நைனாா் நாகேந்திரனுடனான சந்திப்பு குறித்து கேள்விக்கு, தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் குறித்து மட்டுமே அவா் தன்னுடன் ஆலோசனை மேற்கொண்டதாக பதிலளித்தார்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெகவிற்கும் திமகவுக்கு இடையே மட்டுமே போட்டி என தவெக தலைவா் விஜய் பேசி வருவது குறித்த கேள்விக்கு, அது அவர் கருத்து, ஆனால் தமிழக மக்கள்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

ஆரப்பாளையம் பகுதியில் இன்று மின் தடை

குற்றாலத்தில் காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்

கொடைக்கானலில் இனிப்பக உரிமையாளா் மீது தாக்குதல்

தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் எ.வே. வேலு

SCROLL FOR NEXT