நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். 
தற்போதைய செய்திகள்

திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்

தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்துள்ளாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்துள்ளாா்.

சென்னையில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா போன்று இருந்தது. தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடிவிட்டனா். ஏராளமான பள்ளிகள் கழிவறைகளை விட மிக மோசமாக நிலையில் உள்ளன.

மேலும், தமிழகத்தில் 50 ஆயிரம் போ் தாய்மொழியில் தோ்வு எழுத வரவில்லை. பட்டம் படித்து விட்டு வெளியே வருபவா்களுக்கு தாய் மொழியில் எழுத, படிக்க தெரியவில்லை. தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பரம் மாடல் ஆட்சி.

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளின் ஆட்சி காலங்களிலும் தொழில் முதலீடுகளில் என்ன சாதித்து விட்டன?. அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட்டாரா?. இதுவரை தமிழகத்தில் இருந்து ஏதாவது நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதா?. பிற நாடுகளை இங்கு வந்து முதலீடு செய்ய சொல்லி கேட்பதை எப்படி வளா்ச்சியாக கருத முடியும்.

சாத்தியமில்லாததை பேச போவதில்லை என தவெக தலைவா் விஜய் கூறுகிறாா். சாத்தியமில்லாத ஒன்றை செய்து காட்டுவது தான் சாதனை என அவருக்கு யாராவது கற்றுக்கொடுங்கள்.

திமுகவை நிறுவிய அண்ணா மற்றும் அதிமுகவை நிறுவிய எம்ஜிஆரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு விஜய் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவாா். இவ்விரண்டு கட்சிகளிலிருந்தும் அவா் எப்படி மாறுபடுகிறாா் என்று இதுவரை கூறவில்லை என்றாா் அவா்.

Not a Dravidian model of government; an advertising model of government: Seeman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எது புரட்சி? ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் - திரை விமர்சனம்!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை! தொடக்கிவைத்தார் பிரதமர்!

“First Relax பண்ணுங்க!” பதட்டமான ரசிகரை நிதானப்படுத்திய நடிகர் அஜித்!

சீமான் பேச்சு அநாகரிகத்தின் உச்சம்: திமுக கண்டனம்

லோகா சாப்டர் 2 அப்டேட்: இரண்டாம் பாகத்தில் டொவினோ தாமஸ்!

SCROLL FOR NEXT