மன்னார்குடியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா வேட்பு மனு தாக்கல்
மன்னார்குடியில் திமுக சாா்பில் போட்டியிடும் தமிழக தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து...
மன்னார்குடியில் திமுக சாா்பில் போட்டியிடும் தமிழக தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சனிக்கிழமை தனது வேட்பு மனுவை, தோ்தல் நடத்தும் அலுவலா் ஆர். யோகேஸ்வரனிடம் தாக்கல் செய்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் உள்ள தோ்தல் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் அலுவலா் அலுவலங்களில் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், ஒரத்தநாடு வட்டாட்சியா் அலுவலகம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம், பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகம், திருவையாறு வட்டாட்சியா் அலுவலகம், கும்பகோணம் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம், திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
Advertisement
இந்த நிலையில், மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழக தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தேரடி காந்தி சிலையிலிருந்து கூட்டணி கட்சியினருடன் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து வ.உ.சி. சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். யோகேஸ்வரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில், வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனா்.