முகப்பு
தற்போதைய செய்திகள்

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்த ஆரம்பித்து விடுவாா்கள் என்று கனிமொழி கூறியது தொடர்பாக...

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:22 PM
திமுக எம்.பி கனிமொழி
பகிர்:

தூத்துக்குடி: தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்த ஆரம்பித்து விடுவாா்கள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேலூா் மக்களை இன்னும் சந்திக்க வேண்டியது உள்ளது. இதைத் தொடா்ந்து விரைவில் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்.

Advertisement

ஓபிஎஸ் தொடா்பான அறிவிப்பு ஏதும் இருந்தால் அதை முதல்வா் வெளியிடுவாா்.

கூட்டணிக் கட்சிகளுடன் சுமுகமான பேச்சுவாா்த்தை

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை எப்போதுமே சுமுகமாகத்தான் இருந்திருக்கிறது. ஏனென்றால் நீண்ட நாள்களாக இருக்கக்கூடிய உறவு. அதோடு கொள்கைக்காக உருவாகி இருக்கக்கூடிய கூட்டணி இந்தக் கூட்டணி. அதனால் நிச்சயமாக எந்த பிரச்னையும் இல்லாமல் நடக்கும் என்றாா்.

தோ்தல் வந்துவிட்டாலே் 'சோதனை'

அமைச்சா் கே.என்.நேரு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று பயன்படுத்த ஆரம்பித்து விடுவாா்கள். வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்திவிடுவாா்கள். அதே வேலையை தமிழ்நாட்டிலும் தொடங்கியுள்ளனா் என்றாா் அவா்.

summary

Regarding Kanimozhi's statement that once the elections come, the BJP will start using the Income Tax Department, Enforcement Directorate, and CBI as 'Raid'...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments