ஸ்விட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நேர்ந்த வெடி விபத்தில் 40 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவின் மிக உயரமான மலைத் தொடரான ஆல்ப்ஸின் மையத்தில் கிரான்ஸ்-மொன்டானா, மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு பனிச்சறுக்கு, கோல்ஃப் போன்றவைகளுக்காக வரும் சுற்றுலாப் பயணிகளை பலரையும் ஈர்த்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள கிரான்ஸ் - மொன்டானா நகரில் பிரபலமான சொகுசு பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடி மகிழ, 200 க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
அந்த நாட்டின் உள்ளூர் நேரப்படி, நள்ளிரவு 1.30 மணிக்கு திடீரென பயங்கர வெடிசப்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்டு அங்கிருந்தவர் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
வெடிவிபத்தால் அந்தப் பகுதி முழுவதும் தீ மண்டலமாகக் காட்சியளித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காவல் துறையினரின் முதல்கட்ட தகவலின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் பலர் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
வெடி விபத்து ஏற்பட்ட பாரில் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புத்தாண்டையொட்டி பட்டாசு வெடித்த போது இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லை எனவும் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.