டொனால்ட் டிரம்ப் AP
தற்போதைய செய்திகள்

புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக டிரம்ப் அழைப்பு!

ஐ.​நா. சபைக்கு மாற்​றாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடங்கி உள்ள "போர்டு ஆப் பீஸ்" என்ற புதிய சர்​வ​தேச அமைப்​பில் ரூ.9,000 கோடி (1 பில்லியன் டாலர்) கட்டணம் செலுத்தி உறுப்​பின​ராவது தொடர்பாக.... lzeக

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.​நா. சபைக்கு மாற்​றாக "போர்டு ஆப் பீஸ்" என்ற புதிய சர்​வ​தேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடங்கி உள்ள நிலையில், இந்த புதிய அமைப்​பில் ரூ.9,000 கோடி ( 1 பில்லியன் டாலர்) கட்டணம் செலுத்தி இணையலாம் என்று அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்​துள்​ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காஸா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் அமைப்​புக்​கும் இடையே போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்​பின் முயற்​சி​யால் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்​ரேல், ஹமாஸ் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

போரால் பாதிக்​கப்​பட்ட காஸா நகரை மறுசீரமைப்பு செய்​யும் பணிகளுக்​காக கடந்த ஆண்டு செப்டம்பரில் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு விரிவான திட்டத்தை நான் அறிவித்தேன். 20 அம்சங்களை கொண்ட அந்தத் திட்டத்தை அனைத்து உலகத் தலைவா்களும் ஏற்றுக்கொண்டனா். அவா்களில் அரபு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளின் முக்கியத் தலைவா்களும் அடங்குவா். இந்தத் திட்டத்தில் உள்ள தொலைநோக்குப் பாா்வையை வரவேற்றும், அதற்கு ஒப்புதல் அளித்தும் கடந்த ஆண்டு நவம்பரில் தீா்மானம் ஒன்றை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலும் ஏற்றுக்கொண்டது.

இந்த முயற்சி காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்தும் உயரிய பொறுப்பைப் பகிர தனிச் சிறப்புமிக்க நாடுகளை ஒன்றிணைக்கும்.

புதிய சர்​வ​தேச அமைப்​பின் தலை​வ​ராக அதிபர் டிரம்ப் பொறுப்​பேற்றுள்ளார். அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ, சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், அதிபர் டிரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர், பிரிட்​டிஷ் முன்​னாள் பிரதமர் டோனி பிளேர், அப்​போலோ குளோபல் நிறுவன தலைமை செயல் அதி​காரி மார்க் ரோவன், இந்திய வம்​சாவளியை சேர்ந்த உலக வங்கி தலை​வர் அஜய் பங்​கா, அமெரிக்க தேசிய பாது​காப்பு துணை ஆலோ​சகர் ராபர்ட் கேப்​ரியேல் ஆகியோர் உறுப்​பினர்​களாக நியமிக்​கப்​பட்டு உள்​ளனர்.

ரூ.9,000 கோடி கட்​ட​ணம்

புதிய சர்​வ​தேச அமைப்​பில் உலக நாடு​கள் நிரந்தர உறுப்பினராக இணையலாம். இதற்கு தலா ரூ.9,000 கோடி(1 பில்லியன் டாலர்) கட்​ட​ணம் செலுத்த வேண்டும். இந்த புதிய அமைப்பு காஸா​வின் மறுசீரமைப்பு பணி​களில் ஈடு​படும் என்றும் இந்​தியா, பாகிஸ்​தான் உள்பட பல்​வேறு நாடு​கள் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச அமைதித் திட்டத்தைச் செயல்படுத்த காஸாவுக்காக "புதிய சர்​வ​தேச அமைப்பை" நிறுவுவதற்கான தனது முடிவுக்கு, ஐ.நா.வின் திறமையின்மையே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

மோடிக்கு டிரம்ப் அழைப்பு

இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பணியாற்றவுள்ள குழுவில் இணையுமாறு பிரதமா் மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இருப்பினும், 1 பில்லியன் டாலர்களை வழங்கும் நாடுகள் வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக சேரலாம். அதே சமயம் பணம் செலுத்தாத நாடுகள் மூன்று ஆண்டு காலத்திற்கு இதில் இணைந்திருக்கலாம்.

இந்த முயற்சி காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்தும் உயரிய பொறுப்பைப் பகிர தனிச் சிறப்புமிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

குறுக்​கு வழி

இதுகுறித்து ஐ.நா. சபை​யின் மூத்த அதி​காரி டேனியல் போர்டி கூறும்​போது, "உலக விவ​காரங்​களில் தலை​யிட அமெரிக்கா விரும்​பு​கிறது. இதற்​காக புதிய அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டு உள்​ளது. இது குறுக்​கு வழி" என்​று குற்​றம்​ சாட்​டியுள்ளார்.

Prime Minister Modi has been invited by Trump to serve on the Gaza Peace Board

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் வருகை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை!

ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம்! ஏன்?

ஓராண்டு ஆட்சி! குட்டி டிரம்ப்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கி கலிஃபோர்னியா ஆளுநர் கிண்டல்!

ஒரே நாளில் 463 பேருக்குப் பிணை: பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் ஹிமா பிந்துவின் இரு மலர்கள் தொடர்!

SCROLL FOR NEXT